தன் குழந்தையை கொன்ற கள்ள காதலனை போட்டு தள்ளிய பாசக்கார தாய்

திருவண்ணாமலையில் கடந்த டிச.29ம் தேதி கொலை செய்யப்பட்ட நாகராஜன் கொலையில் முக்கிய குற்றவாளி மஞ்சுளா கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது கணவர் கார்த்தி . இந்த தம்பதியின் மகன் தான் சிறுவன் ரித்தேஷ். இந்த தம்பதியின் குடும்ப நண்பர் தான் கொலை செய்யப்பட்ட நாகராஜ் .

manjula
இந்த நாகராஜுக்கும் மஞ்சுளாவுக்கும் ஏற்பட்ட கள்ளக்காதலை கணவர் கார்த்தி பலமுறை கண்டித்து உள்ளார் . இதனால் மனமுடைந்த மஞ்சுளா , நாகராஜின் உறவை துண்டித்து உள்ளார் . இதனால் வெறுப்படைந்த நாகராஜ் ,சிறுவன் ரிதேசை கடத்தி ,கொலை செய்து விட்டார்.

nagaraj
இந்த கொலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட நாகராஜ் 9 மாத சிறை வாழக்கைக்கு பிறகு திருவண்ணாமலையில் உள்ள மொபைல் ஷாப்பில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனை அறிந்த மஞ்சுளா கூலி படை அனுப்பி அந்த வஞ்சகன் நாகராஜை கொடுரமாக கொலை செய்து விட்டர்.
போலீசார் மஞ்சுளா மேல் சந்தேகமடைந்து அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். நாகராஜை கொலை செய்வதற்காக துப்பாக்கி வாங்கிய விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *