உனக்கு இது தேவையா ?

0

ஒரே நாள்ல எல்லாரோட காலில் விழுந்த கிரிக்கெட் வீரர்

ஆஸ்திரேலியா இந்தியா இவங்க  இடையே நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியை கொண்டாடும் விதமாகவும், அடுத்து நடக்க இருக்கிற ஒருநாள் போட்டிகளில் கலந்து கொள்வதற்காகவும்  நட்சத்திர வீரர் பாண்டியா இந்திய அணியோடு இணைந்துள்ளார்

இதோடு சில தினங்களுக்கு முன்னர் ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரும் ராகுலும் ஒரு சர்ச்சைக்குரிய பதில்களையும் விளக்கத்தையும் அளித்து உள்ளார்கள்.  அதில் ஒன்று சச்சினை விட விராத் கோலி தான் மிகச்சிறந்த வீரர் என்று சொல்லி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் வெறுப்பேற்றி உள்ளார்

இன்னும் அதிகப்படியாக யாரோடு டேட்டிங் போகணும் யாரோட உல்லாசமாக இருக்கணும் அப்படின்னு இரண்டு நடிகைகளின் பேரையும் தெரிவித்துள்ளார்கள்,.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர் ரசிகர்களும்  முன்னாள் வீரர்களும். மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த மாதிரி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த 2 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது .அதுவும் 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று.

அதிர்ந்து போன பாண்டியா தன் கருத்து, யாரையும் காயப்படுத்தி இருந்தால், என்னை மன்னிக்க வேண்டும் கூறியுள்ளார் . மேலும் யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Thanks for photo – twitter


Leave A Reply