சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனுக்கு எச்சரிக்கை விடுத்த இயக்குனர்.

0

தமிழ் சினிமாவை விமர்சனம் என்ற போர்வையில் தன் இஷ்டத்திற்கு விமர்சித்து செல்லும் youtube விமர்சகர்கள் பலர் உண்டு .. அதில் தமிழ் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலை நடத்திவரும் ப்ளூ சட்டை மாறன் அனைவரின் வெறுமையை சம்பாதித்து வைத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஏற்கனவே சார்லி சாப்ளின் 2 என்ற திரைப்படத்தை கண்டபடி விமர்சித்ததற்காக அப்படத்தின் இயக்குனர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்

இந்நிலையில் சென்னையில் ‘கோணலா இருந்தாலும் என்னோடது’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த மாதிரி யூ-டியூப் விமர்சகர்கள்களை கடுமையாக எச்சரித்தார் இயக்குனர் பேரரசு.

இப்படத்தில்  க்ரீஷ், மேகா, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார் . டி கே பிக்சர்ஸ் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பேரரசு, இப்படத்தின் தலைப்பை கேள்விப்பட்டு நான் முதலில் தயங்கினேன்.. கதை வித்தியாசமாக இருக்கிறது என்றுதான் இவ்விழாவில் கலந்து கொண்டேன். தற்போது அனைத்து தயாரிப்பாளர்களும் யாராருக்கோ பயந்த காலம் போய் யூட்யூபில் விமர்சனம் செய்பவர் களுக்காக பயந்து ஒதுங்க வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது. பல கோடி பணம் போட்டு எடுப்பவர்களை தன் இஷ்டத்திற்கு ஒருமையில் பேச இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. இது இவ்வாறு தொடர்ந்தால் விளைவுகள் வேறு மாதிரி ஆகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்தார் .

Comments are closed.