சர்வம் தாளம் மயம் – சிறப்பு பார்வை

0

ஏ ஆர் ரகுமான், ஜி வி பிரகாஷ், ராஜீவ்மேனன் என 3 இசைக்கலைஞர்கள் சேர்ந்த இசைக்காவியம் சர்வம் தாளம் மயம்

சாதாரண மிருதங்கம் செய்துவரும் தொழிலாளி யின் மகனாக ஜிவி பிரகாஷ் .மிகப்பெரிய மிருதங்க வித்வானாக நெடுமுடி வேணு, இவர்களுக்கு இடையில் நடக்கும் கதைதான் சர்வம் தாளம் மயம்

படிக்காமல், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகனாக, விஜய் படம் ரிலீசிற்கு என்றால் தியேட்டர் வாசலில் டிரம்ஸ் வாசித்து அனைவரையும் குஷிப்படுத்துவதே முழுநேரப் பணியாக இருக்கிறது கதாநாயகனுக்கு … ஒருநாள் மிருதங்க வித்துவான் நெடுமுடி வேணு வாசிக்கும் திறமையை நேரில் காண, அன்றிலிருந்து மிருதங்கத்தை கற்றுக்கொள்ள துடியாய் துடிக்கிறார்.

அதற்கு முயற்சி செய்ய, அவருடைய ஜாதி மிகப்பெரிய தடையாக இருக்க, நெடுமுடி வேணுவின் உதவியாளரும் [நடிகர் வினித்] மிகப்பெரிய தடையாக உள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதையும் தாண்டி மிருதங்கம் கற்றுக்கொள்வது சத்தியமா! சங்கீதம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே சாருமா? என்பதற்கான கேள்விகளுக்கு தன் திரைக்கதையால் மிக அழகாக பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜீவ் மேனன்.

எட்டு படங்களை கடந்த ஜிவி பிரகாஷுக்கு இந்த ஒன்பதாவது படம், நடிப்பில் நான் ஒரு நடிகன் என்பதை நிரூபித்திருக்கிறார். இசை தெரிந்த ஒரு நடிகன் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற, இயக்குனரின் எண்ணத்திற்கு,சிறப்பாகவும் அழகாகவும், வலு சேர்த்திருக்கிறார் ஜீவி என்றால் அது மிகையாகாது.

பீட்டர் என்ற கதாபாத்திரத்தில் ஜிவி மிக அழகாக வாழ்ந்துள்ளார் . 20 வயது கடந்து இளைஞனுக்கு வருகிற காதல், குழப்பம், வாழ்க்கையின் தடுமாற்றம், இசை மீதான அதீத காதல் ,குரு பக்தி, அவமானத்தின் வலி ,இப்படி அனைத்து உணர்வுகளையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறார் ஜிவி.

ஜாதியை மீறி அடிப்படை தகுதிகள் வேண்டும், அதாவது ஒழுக்கம் மட்டுமே ஒரு கலையை மிகச் சிறப்பாகக் கற்றுக் கொள்ள முடியும், என அனைவருக்கும் மிக அழகாக சொல்லியிருக்கிறார் நெடுமுடி வேணு.

‘ஒருவருட வெற்றியை பார்த்து பேசுற, ஆனா நான் நூறு வாத்தியக்காரர்கள் வறுமையை பார்த்து பேசுறேன்’ என்ற ஒரு தகப்பனின் ஆதங்கத்தையும், பொருளாதாரப் பிரச்சினைகளையும், மிக அழகாக கண் முன்னே காட்டுகிறார் இளங்கோ குமரவேல்.

‘மிகச் சிறந்த கேமரா மேன்’ படத்தின் இயக்குனர், அப்போ ஒளிப்பதிவு மிக அழகாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்துள்ளார் என ராஜீவ் மேனன்… எந்த வகையிலும் குறை சொல்லாத ரவி யாதவின் ஒளிப்பதிவு.

மேலும் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமானின் இசையில் அனைத்து பாடல்களும் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது

ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இயக்குனர் ராஜீவ் மேனன் இசையமைத்துள்ளார் … வரலாமா என்ற பாடல் மொத்த ஆல்பத்தில் தனிரகம்

இசை, தாளம், சம்பந்தமான  கதை எல்லோருக்கும் போரடிக்காமல் இருக்க, சில அறிவார்ந்த நுணுக்கங்களை, திரைக்கதையில் புகுத்தி அனைவரையும், கடைசிவரை ஆர்வமுடன் உட்கார வைக்கிறார் இயக்குனர் ராஜீவ் மேனன்.

மிகப்பெரிய நடிகர்கள், மிகப்பெரிய பட்ஜெட், மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் , இவர்கள் இணைந்து கச்சிதமான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் பார்ப்பதற்கு, இசை அறிவு தேவையில்லை…

Leave A Reply