#சனிக்கிழமைபிரதமர் – ஸ்டாலினை கலாய்க்கும் ட்விட்டர்

0

டிவிட்டரில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், மிகப் பிரபலமாகி இன்று வலம் வருகிறார்.

#சனிக்கிழமைபிரதமர் என்ற ஹேஷ்டாக் மிக வைரலாகி வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலினை இதற்கு முன்னாடி இந்த அளவுக்கு கலாய்த்து ட்விட்டரில் மீம்ஸ் வரவில்லை.

சில நாட்களுக்கு முன்பு பாஜக தலைவர் அமித் ஷா,  அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தால் வாரத்தில் ஆறு பிரதமர் பதவி  வகிப்பார்கள் என்றார். அதாவது அகிலேஷ் யாதவ் திங்கட்கிழமையும், மாயாவதி செவ்வாய்க்கிழமையும், மம்தா பானர்ஜி புதன்கிழமையும், தேவகவுடா வியாழக்கிழமையும், சந்திரசேகர ராவ் வெள்ளிக்கிழமையும், ஸ்டாலின் சனிக்கிழமையும் பிரதமராக இருப்பார்கள் என்று கிண்டலடித்தார்.  ஞாயிற்றுக்கிழமை மட்டும் அனைத்து தலைவர்களுக்கும் மற்றும் நாட்டுக்கும் விடுமுறை விடப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் எப்பதான் சனிக்கிழமை வரும் என்பது போல் காலையில் இருந்தே ஸ்டாலினை கலாய்க்க தொடங்கிவிட்டார்கள். ஒவ்வொரு மீம்ஸ்ம் ஒவ்வொரு விதம் #சனிக்கிழமைபிரதமர் என்ற ஹேஷ்டாக் மிக வேகமாக ட்ரெண்டாகி வருகிறது .

Leave A Reply