கோடிகளில் புரள வைக்கும் ‘இஞ்சி’

0

வீட்டில் சமைக்கும் போது முக்கியமாக,  மட்டன், சிக்கன் சமைக்கும் பொழுது, இஞ்சி தவறாமல் உபயோகிப்பார்கள்… ஏனெனில் நாம் சாப்பிடும் உணவு நல்ல செரிமானம் ஆக வேண்டும் என்ற நோக்கம் அதில் உள்ளது.  கெட்ட பாக்டீரியா வைரஸ்களை எதிர்த்துப் போராடும். வயிற்று உப்புசத்தை சரி செய்யும். இஞ்சி சாறோட கொஞ்சம் வெங்காயத்தையும் சேர்த்து ஒரு வாரம் மட்டும் ஒரு ஸ்பூன் வீதம் காலையில குடித்து வந்தால், நீரிழிவு நோயின் தன்மை குறையும்னுசொல்றாங்க…

மேலும் இந்த இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு, மூன்றையும் கலந்து ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் ,ஆஸ்துமா, இளைப்பு, இருமல், இவைகளை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிடலாம்னு சொல்றாங்க.

இங்க நிறைய பேருக்கு இஞ்சி டீ குடிப்பது வழக்கம்., ஏனென்றால் அது நறுமணத்தை மட்டுமல்லாமல், உடலை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். நம்ம வீட்டுல செய்யும்போதுகூட டீ போடும் போது ,இரண்டு மூன்று துண்டுகளை அதோடு சேர்த்து கொதிக்க வைத்தால் ,தேநீர் பருக நன்றாக இருக்கும். உடலுக்கு ரொம்ப நல்லது.

அதேமாதிரி இஞ்சியும் தேனும் கலந்து சாப்பிட்டு வர, செரிமானம் சரியாகும். வயிற்றில் இருக்கும் கொழுப்பு குறையும். இதனால் தொப்பை குறையும் .தொடர்ந்து 40 நாட்களுக்கு இந்த கலவையை சாப்பிட்டு வர ,மிகப்பெரிய மாற்றத்தை உங்கள் வயிற்றில் காணலாம்.

வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் தீர, இஞ்சி சாறை பாலில் கலந்து பருக வேண்டும்..

இஞ்சி எந்த உணவில் சேர்த்தாலும் அது உடம்புக்கு மிக பயனுள்ளதாக அமையும் .மலச்சிக்கல் களைப்பு, மார்பு வலி, வாத கோளாறு, பித்தம் ,அஜீரணம், வாய் துர்நாற்றம், வயிற்று உப்பிசம் ,இரைச்சல், இவை எல்லாம் சரியாகும்.

நம்ம இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்த ஆங்கிலேய ஒரு பெண்மணி, நமது இஞ்சி டீ சாப்பிட்டு மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளார்… அவரது சொந்த ஊரில் இதே பார்முலாவை தயார் செய்து விற்பனை செய்யும் பொழுது ,அதற்கு மிகப்பெரிய வரவேற்பு  கிடைத்ததை அடுத்து இன்று அவர் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆகி உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே… சமூகவலைத்தளங்களில் இவரைப்பற்றிய தகவல்கள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கும்.

இஞ்சி உடலுக்கும் மனதுக்கும் பணதிற்கும் நல்லது

Leave A Reply