குழந்தைகள் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவன்

0

‘உன்னோட வாழ முடியாது’ என்று சொன்ன ஒரே காரணத்துக்காக மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சேர்ந்தவர்கள் வேலுமணி லதா .இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் .வேலுமணி லதாவிடம் அடிக்கடி சண்டை இட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார். இதன் காரணமாக மனம் வெறுப்படைந்த லதா குழந்தைகளை சேர்த்து தன் அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்.

குழந்தைகளும் மனைவியும் பிரிந்து சென்றுவிட்டனர் என்ற வருத்தத்திலும், வேதனையிலும், இருந்த வேலுமணி சமாதான பேசுவதற்காக, லதாவின் அம்மா வீட்டுக்கு சென்று உள்ளார்… போகும் வழியிலேயே ஒரு கடையில் லதாவும் அவருடைய குழந்தைகளும் நின்றுள்ளனர்.. அங்கு சமரசம் பேச முயன்ற வேலுமணிக்கும் லதாவுக்கும் கடும் வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதில் அதிக கோபம் அடைந்த வேலுமணி ,தன் கையில் வைத்திருந்த கத்தியை வைத்து லதாவை, குழந்தைகள் எதிரிலேயே கண்மூடித்தனமாக துடிதுடிக்க கொலை செய்துள்ளார். லதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளார். இதன்பின் வேலுசாமி அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைந்து விட்டார். அவரிடம் விசாரணை நடத்துவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .

Leave A Reply