குழந்தைகளுக்கு பிடித்த இட்லி பொடியை தயார் செய்வது எப்படி?

0

இன்றைக்கு குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எந்த அளவு புரோட்டா பிடிக்குமோ, அதே அளவு இட்லியும் ரொம்ப பிடிக்கும். அதோடு மட்டுமல்லாமல் இட்லிக்கு ,இட்லி பொடி வைத்து சாப்பிடுவது மிகவும் பிடிக்கும்.

இதுல நாம இட்லி பொடியை, எப்படி வீட்டிலேயே, நமது குழந்தைகளுக்கு ஏற்றவாறு, நாவிற்கு ருசியாகவும், உடல்நலத்திற்கு பாதுகாப்பாகவும் ,எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

இதற்கு முக்கியமாக நான்கு பொருட்கள் வேண்டும்.

  1. காய்ந்த மிளகாய் அதாவது சிகப்பு மிளகாய் வற்றல்
  2. 200 கிராம் கடலை பருப்பு
  3. 100 கிராம் உளுந்தம்பருப்பு
  4. ஐந்து அல்லது ஆறு பூண்டுப் பற்கள்
  5. வாசனைக்காக காய்ந்த கருவேப்பிலை

இந்த பொருட்களை வைத்து எப்படி சுவையான இட்லி பொடி தயார் செய்வது என்று பாப்போம் …


கருவேப்பிலையை இரண்டு நாட்கள் வெயிலில் நன்கு காய விடவும் .
கடலைப்பருப்பையும் உளுந்தம் பருப்பையும் மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்.
பின்பு மிளகாய், காய்ந்த கறிவேப்பிலை, வறுத்த கடலைப்பருப்பு, வறுத்த உளுத்தம்பருப்பு, பெருங்காயம் மற்றும் பூண்டு இவைகளை நன்றாக மிக்ஸியில் அரைத்தால் சுவையான இட்லி பொடி தயார்

Leave A Reply