கல்யாணத்தையும் காதலையும் ஒத்துக்கொண்ட ஆர்யா

0

நடிகர் ஆர்யா நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் பேச்சுலராக வாழ்ந்து வந்தவர். தன்னுடைய சக நடிகரும் நண்பனுமான விஷாலின் திருமணத்திற்கு அப்புறம்தான் என் திருமணம் என்று அவ்வப்போது கூறிவந்தார்…

விஷால் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு எனக்கு திருமணம் என்று அவர் சொல்லி வர, ஒருவழியாக இருவரும் திருமண  வாழ்க்கையில் வாழ முடிவு எடுத்துள்ளனர்.

நடிகர் விஷால் அவருடைய பெற்றோர் பார்த்த பெண்ணை ஹைதராபாத்தில் திருமணம் செய்த போவதாக செய்தி வந்ததும், நடிகர் ஆர்யா தன்னுடைய கல்யாணத்தையும் காதலையும் தற்போது இந்த காதலர் தினத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அரசல்புரசலாக இருந்த இவர்களின் காதல் தற்போது அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதில் வரும் மார்ச் மாதம் கல்யாணம் செய்யப் போகிறோம் ,உங்கள் வாழ்த்துக்களும் ஆதரவும் வேண்டும் என்று டுவிட் செய்துள்ளார் .

வாழ்த்துக்கள் ஆர்யா

Comments are closed.