கருப்பு கோழி கறியும், கண்டிராத மருத்துவ குணமும்

0
thanks – quora

கோழி என்றாலே பலவகை கோழி இனங்கள் உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். கின்னி கோழி, நாட்டுக்கோழி, பிராய்லர் கோழி, வான்கோழி என பட்டியல் நீளும்.

ஆனால் நாம்,  கருப்பு கோழிகளை அதாவது கருங்கோழி, கடக்நாத் கோழி, என பெயர் கொண்ட இந்த கருப்பு கோழிகளைப் பற்றி அறிந்திருக்க மாட்டோம்.

thanks – quora

இவை மத்திய பிரதேச மாநில காடுகளில் வளரும் ஒரு நோய் எதிர்ப்பு அதிகம் உள்ள கோழி இனமாகும்.  இதோட கறி கூட கருப்பாக இருக்கும். அதனால இத பிளாக் மீட் சிக்கன் அப்படின்னு சொல்றாங்க. இங்க தமிழ் நாட்டுல ஓமலூர் வேலூரில் பண்ணை அமைத்து வருகிறார்கள்

முக்கியமா ஹோமியோபதி மருத்துவத்தில், நரம்புத்தளர்ச்சி இருக்குறவங்களுக்கு இந்த கருப்பு கோழியோட கறிய சாப்பிட, மருத்துவர்கள் சொல்றாங்க .

இந்த கருப்பு கோழி, சாப்பிடுவதற்கு டேஸ்டா இருக்கும் .அதோட மணமாகவும் இருக்கும் அப்படின்னு சொல்றாங்க . முக்கியமா மருத்துவகுணம் அதிகமா இருக்கும். அதிக நாள்பட்ட நோய்களுக்கு முக்கிய மருந்தாகும் இதைப் பயன்படுத்துறாங்க.

thanks – quora

இந்த கோழி இறைச்சி 25 சதவிதம் புரதச்சத்து இருக்கு. கொலஸ்ட்ரால் 1.5 சதவீதம் மட்டுமே இருப்பதால் இந்த கோழி இறைச்சி, இதயநோய் பாதிப்பு இருக்கிறவங்களுக்கு அருமருந்து என்று சொல்லலாம்.

இந்த இறைச்சியில் அமினோ அமிலங்களும், நமக்கு தேவையான ஹார்மோன் சத்துக்களும் அதிகம் இருக்குன்னு சொல்றாங்க .இந்த இறைச்சி ஆண்களுக்கு ஆண்மை தன்மையை அதிகரிக்கும். வயாகரா மாத்திரை போல் விந்தணுக்களின் வீரியத்தை அதிகரிக்கும் அப்படின்னு சொல்றாங்க.

மைசூரில் இருக்கிற உணவு ஆராய்ச்சி கழகம், இந்த கோழி இறைச்சி, இதய நோய்க்கு அருமருந்து என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.

thanks – quora

சைனா நாட்டில் தினமும் உணவில் வந்து இந்த கருங்கோழி இறைச்சியை சாப்பிடுகிறார்கள்

சித்த மருத்துவத்திலும் வாதம் ,சிரங்கு, இந்த மாதிரியான நோய்களுக்கு இந்த கருங்கோழி கறியை சாப்பிட்டோம் என்றால்,  உடனே சரியாகும் அப்படிங்கறது சித்த மருத்துவத்தோடு நம்பிக்கை.

Leave A Reply