கமலுக்கு கார்டூனிஸ்ட் ஆதரவு

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த போது, நாதுராம் கோட்சே பற்றி பேசியதற்கு, பாரதீய ஜனதா கட்சியினரும், இந்து அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

தற்போது கமலின் பேச்சுக்கு பல தரப்பிலும் ஆதரவு பெருகி வருகிறது. பிரபல கார்டூனிஸ்ட் பாலா அவர்கள் தற்போது கமலுக்கு ஆதரவு தந்துள்ளார்.

அதில் ‘கமல் பேசியதில் ஒரு தவறும் இல்லை.. இந்தியாவின் தேசத்தந்தையாக போற்றப்படும் ஒருவரை போட்டுத்தள்ளியது நாதுராம் கோட்சே என்ற இந்துத்துவாவாதிதான்.. காந்திக்கும் அவனுக்கும் வாய்க்கா வரப்பு தகராறு ஏதுமில்லை.. இந்து மத அரசியலுக்காக தான் காந்தியை கொன்றான்.. என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .