கணவன் மனைவிக்குள் தினமும் சண்டை வராமல் இருக்க ..

எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் வாழ்க்கையில ஒரு தடவையாவது அழுதிருப்பான்… அதே மாதிரி ஒவ்வொரு ஏழையும் ஒரு நாளாவது சிரிச்சுருப்பான்… இந்த அரிய தத்துவம் மாதிரி வாழ்க்கையில , சண்டை போடாத கணவன் மனைவியே இருக்க மாட்டாங்க. திருமணத்திற்கு பிறகு கௌரமான கண்ணியமான வாழ்க்கையை தான் வாழணும்னு எல்லாரும் ஆசை படுவாங்க.. ஆனா அப்படி நடக்கிறது இல்ல.. திணமும் வாக்குவாதம், சண்டை இப்படி, தினமும் நிம்மதி இல்லாத வாழ்க்கையை தான், நிறைய பேர் வாழ்ந்துட்டு இருக்கோம். இன்னும் சில பேர் திருமண உறவே முறித்து கொண்டு போய் விடுகின்றனர்… என்னமோ வேறு திருமணம் செய்தவுடன் எல்லாம் சரியாகி விடுவது போல் … சரி விசயத்திற்கு வருவோம் .. இந்த மாதிரி தம்பதிகள் சண்டையிட்டு கொள்ளாமல் இருக்க சிறப்பான பரிகாரம் உள்ளது.

திருமணமான தம்பதிகள் தினமும் சண்டை போட்டு கொள்ளாமல் இருக்க , பூஜையறையில் கிருஷ்ணன் -ராதை சேர்ந்திருக்கும் ஸ்வாமி படத்தை வைத்து தினமும் வணங்கி வருவதால், தம்பதிகளின் சண்டைகள் குறைவதை கண்கூடாக காணலாம். அதே மாதிரி ஒவ்வொரு பிரதோஷமன்று சிவன் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு வெள்ளம் பச்சரிசி சேர்த்து படையல் வைத்து நெய் விளக்கேற்றி வணங்க வேண்டும் .. பின்பு படையல் பிரசாதத்தை அங்குள்ள பக்தர்களுக்கு வழங்க வேண்டும் . பிரதோஷ தினத்தில் கோயிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள், அப்பிரதோஷ தினத்தில் வீட்டிலேயே பச்சரிசி, வெல்லம் கலந்த உணவு படையலை உங்கள் வீட்டிலோ அல்லது வேறு எங்காவதோ உங்கள் காளை மாட்டிற்கு உணவாக கொடுக்க வேண்டும். பசு மாட்டோடு ஜோடியாக வளர்க்கப்படும் காளை மாட்டிற்கே மேற்கூறிய படையலை கொடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.