கடவுளால் கூட உங்களை காப்பாற்ற முடியாது – கார்த்தி சிதம்பரத்திற்கு கோர்ட் எச்சரிக்கை

0

ஐ என் எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் .இவர் வழக்குகளில் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

இந்த வழக்குகள் தொடர்பாக மார்ச் மாதம் 5 6 7 மற்றும் 12 தேதிகளில் அமலாக்கத்துறை முன்  கார்த்தி சிதம்பரம் ஆஜராகி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான  அமர்வு இன்று உத்தரவிட்டது.

சட்டத்தோடு விளையாடாதீர்கள் என்று உச்சநீதிமன்றம்  கார்த்தி சிதம்பரத்திற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதே போக்கை  நீங்கள் தொடர்ந்தால் கடவுளால் கூட உங்களை காப்பாற்ற முடியாது என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.


அதே நேரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்று அவர் வெளிநாடு செல்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அவர் வெளிநாடு செல்லும்போது அவரது வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் அதற்கு முன் பிணைத் தொகையாக உச்சநீதிமன்றத்தில் ரூபாய் 10 கோடி ரூபாயை செலுத்திவிட்டு தான் செல்ல வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ டி பி  டென்னிஸ் விளையாட்டு தொடர்பாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு செல்ல வேண்டுவதாக கார்த்திக் சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்

Leave A Reply