ஓவியங்களுக்கு ‘உயிர்’ தரும் ‘கூடல் கண்ணன்’

WhatsApp-Image-2018-12-25-at-12.14.11-PM.jpeg

கண்ணில் பார்த்ததை வரைவது, பார்த்தவுடன் வரைவது என ஓவியர்களில் பலர் இருந்தாலும் மதுரை ‘கூடல் கண்ணன்’ வரையும் ஓவியங்கள் மிக பிரசித்தி பெற்றவை. சுமார் 25 வருடங்களாக ஓவியத்தில் பல சாதனைகளையும் பாராட்டுகளையும் பெற்ற இவர், இன்னும் பொருளாதார நிலைமையில் பின் தங்கியே உள்ளார்.

WhatsApp-Image-32018-12-25-at-12.14.13-PM.jpeg

ஓவியம் மட்டும்மில்லாமல் மிமிக்கிரி கலைஞராகவும் தன்னை வளர்த்து கொண்டுள்ளார்.. பல டிவி நிகழ்ச்சியில் தன பல குரல் வித்தையை காண்பித்து பாராட்டுகளை அள்ளியுள்ளார் ‘கூடல் கண்ணன்’ .

WhatsApp Image 2018-12-25 at 12.17.21 PM

பாட்டில் மூடி, சாக்பீஸ், சோப் என கிடைக்கும் அனைத்து பொருட்களிலும் தன் கை வண்ணத்தை காண்பிக்கும் இவர் கோல பொடியை மட்டும் வைத்து மிக தத்ருபமாக வரைவதில் மிக கில்லாடியாக உள்ளார். திருமணங்களில் மணமக்களை கோலப்பொடியில் வரைந்து அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளார்…

WhatsApp Image 2018-12-25 at 12.15.48 PM

சைக்கிளில் சென்றவாரே ஓவியம் வரைதல், பேப்பரை கட் செய்து அதன்மூலம் உருவங்களை வரைதல்,
இரு கைகளால் தலைகீழாக வரைதல், வீணான பொருட்களை வைத்து காலை பொருட்கள் செய்வது என பன்முக கலைஞராக வலம் வருகிறார்.

WhatsApp Image 2018-12-25 at 12.15.51 PM

இவரும் இவரின் ஓவியங்களும் பிரபலமானாலும், வாழ்க்கை போரடித்து விட்டதாக நினைத்த இவர் ஒரு மெட்ரிக் பள்ளியில் ஓவிய ஆசிரிராக பணி புரிந்துள்ளார்…

அங்கு பல மாணவர்களுக்கு ஓவிய பயிச்சியை கொடுத்து கலையை வளர்த்துள்ளார்.
இப்பொழுது, அந்த ஆசிரியர் பணியும், திருப்தி நிலையில், மனம் சென்ற போக்கில் பயணித்து திறமைகளை வளர்க்கிறார்.

இவரும் இவரது ஓவிய கலையும் மென்மேலும் வளர tamilbulletin.com வாழ்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *