ஓய்வை அறிவித்த விராட் கோலி… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

0

இந்திய கிரிக்கெட் உலகில் ,கபில்தேவ், சச்சின், தோனி இவர்களுக்கு அடுத்தபடியாக விராட் கோலி தவிர்க்கமுடியாத ஒரு வீரர்…

இந்திய கிரிக்கெட் வரலாறு, இனி விராட்கோலி இல்லாமல் எழுத முடியாது. அந்த அளவிற்கு சாதனை மேல் சாதனை செய்து ரசிகர்களையும் சக வீரர்களையும் ஆச்சரியத்தையும் சந்தோசத்தையும் கொடுத்து வரும் இவர், எதிரணிக்கு இன்றுவரை சிம்மசொப்பனமாக விளங்குகிறார்.

உலக கிரிக்கெட் வரலாற்றில் இவருடைய சாதனைகள் இனி யாராலும் நிகழ்த்த முடியாது என்பதே உண்மை.  இவரது வயது, இவருடைய அனுபவம் , இவருடைய திறனும் பார்க்கும்பொழுது இனி இவருடைய சாதனைகள் யாரும் நெருங்கக்கூட முடியாது என்பதே உண்மை.

இந்நிலையில் தன்னுடைய ஓய்வு பற்றி அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி .சமீபத்தில் ஆஸ்திரேலியாவை நொறுக்கி எடுத்த நமது கோலி தலைமையிலான இந்திய அணி,  அங்கிருந்து நியூசிலாந்து சென்று, அங்கு ஒரு வரலாற்று வெற்றியை கொடுக்க இருக்கும் நமது கேப்டன் அவர்கள் , தனது விராட் கோலி அப்ளிகேஷன் மூலம் ரசிகர்களோடு நேற்று பேசினார்.

அப்போது இன்னும் 8 வருடங்களுக்கு பிறகு அனுஷ்காவுடன் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பேன். ஆனால் அப்போதும் என் வாழ்க்கையில் கிரிக்கெட் ஒரு பகுதியாக இருக்கும் .எந்த காலத்திலும் குடும்ப முக்கியமானது. வாழ்க்கை வேறு, கிரிக்கெட் வேறு, என்று நான் பார்த்ததில்லை என கூறினார். தற்போது 30 வயதாகும் இவர் , இன்னும் எட்டு ஆண்டுகள் விளையாடினால் ,கிரிக்கெட்டில் அவருடைய சாதனைகளை நெருங்கவே முடியாது என்பதில் சந்தேகமே இல்லை .

Leave A Reply