ஐசிசி வார்னிங் – தோனி கீப்பிங் செய்யும்போது ….

0

‘தோனி  ஸ்கிப்பிங் செய்யும்போது யாரும் கிரீஸ் கோட்டை தாண்டாதீர்கள்’ இப்படி ஒரு எச்சரிக்கை icc ட்விட்டர் அக்கவுண்ட்ல பதிவு பண்ணி இருந்தா எப்படி இருக்கும் ?

ஆனால் இதுதான் உண்மை.. அனைத்து சமூக வலைத்தளங்களிலும் நேற்று நடந்த இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தோனியின் கீப்பிங்கியையும் அவர் ரன் அவுட் செய்த விதமும் மிகப்பெரிய பாராட்டை பெற்றுள்ளது.

நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீசம்-ஐ ரன் அவுட் செய்ததற்காக இவ்வளவு பெரிய பாராட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

அதற்குமேலும் மகுடம் சூட்டுவது போல் icc, ‘இனிமேல் யாரும் தோனி கீப்பிங் செய்யும்பொழுது கிரீஸ் கோட்டை தாண்டி விளையாடாதீர்கள்’ என்று எச்சரிக்கை பதிவை செய்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் ,குறிப்பாக தோனியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

twitter

அதற்கு சம்பந்தப்பட்ட நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீசம் நன்றி தெரிவித்துள்ளார் இனிமேல் பந்து யாரிடம் இருக்கிறது என்பதை பார்த்து ஓடுகிறேன் என்றும் கூறியுள்ளார் .

twitter

Leave A Reply