எஸ் .பி .ஐ கார்டு மூலம் பெட்ரோல் போட்டால், மேலும் 5 லிட்டர் இலவசம். எஸ் .பி .ஐஅதிரடி

தற்சமயம் ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்படி எஸ்பிஐ வங்கியானது இந்தியன் ஆயில் எண்ணெய் நிலையங்களில் பெட்ரோல் போடும் போது 5லிட்டர் வரை இலவசமாக பெட்ரோல் பெறக்கூடிய சலுகை ஒன்றை வழங்கி வருகிறது.

குறிப்பாக எஸ்பிஐ கார்டு அல்லது பீம் எஸ்பிஐ செயலி மூலம் 100ரூபாய்க்கும் கூடுதலாகப் பெட்ரோல் போடும் போது 2018 நவம்பர் 23-ம் தேதி வரை 5லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது . இந்நிலையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் 5லிட்டர் பெட்ரோல் சலுகயை 2018 டிசம்பர் 15-ம் தேதி வரை எஸ்பிஐ வங்கி நீட்டித்துள்ளது.

இந்தியன் ஆயில் எண்ணெய் நிலையங்களில் 100ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு எஸ்பிஐ கார்டுகள் அல்லது பீம் யூபிஐ மூலம் பணம் செலுத்த வேண்டும்.

பின்பு பணத்தை செலுத்திய பிறகு வங்கி அளிக்கும் 12 இலக்க யுபிஐ குறிப்பு எண் (Reference Number) அல்லது ஆறு இலக்க அங்கீகாரம் குறியீடு (Authorization code) கட்டயாம சேமித்துவைத்துக் கொள்ளவேண்டும்

மேலும் மொபைல் போனில் இருந்து “BHIM SBI Pay: 12-digit UPI reference number DDMM (தேதி/மாதம்)” போன்ற அனைத்து விவரங்களை அளித்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

ஒவ்வொரு நாளும் 10,000எஸ்எம்எஸ் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.50, ரூ.100, ரூ.150, ரூ.200 எனக் கேஷ்பேக் வழங்கப்படும்

இந்த சலுகை 18வயது நிரம்பிய அனைவருக்கும் வழங்கப்படும் என்றும், பின்பு எத்தனை முறை பெட்ரோல் போட்டுப் பணம் செலுத்தினாலும் இந்த சலுகையை வாடிக்கையாளர்களார் பெற முடியும் கூறப்பட்டுள்ளது.. குறிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே எஸ்எம்எஸ் அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெற்றி பெறும் வாடிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு இரண்டு வாரத்திற்குள் அறிவிக்கப்படும் எனவும், பின்பு இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் செலவு செய்க்கூடிய XTRAREWARDS வெகுமதி புள்ளிகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *