எதற்கும் வீட்டை விட்டு வெளியில் வர தேவையில்லை …’ஸ்விக்கி’ பார்த்துப்பான் …

நகர்ப்புறத்தில் இருக்கும் மக்கள் swiggy பற்றி தெரியாமல் இருக்க முடியாது . ஏனென்றால் ஏதாவது ஒரு நாள் அல்லது ஏதாவது ஒரு வேளைகான உணவு இவர்களிடம் இருந்து பெற்றாக வேண்டும்…  அந்தளவு இவர்களின் வளர்ச்சி மிக அபாரமாக இருந்து வருகிறது .

பேச்சுலர்கள், குடும்பர்கள், ஹாஸ்டல் வாழ்க்கை நடத்துபவர்கள், என பல்வேறு விதத்திலும் இவர்களுக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது.ஏனென்றால், எங்கு எந்த உணவகத்தில் உணவு ஆர்டர் செய்தாலும், சில நிமிடங்களில் நமக்கு அந்த உணவை பெற்றுத் தருவார்கள்… அனைவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக ‘ஸ்விக்கி’ இருக்கும் என்ற அளவுக்கு ஆகிவிட்டது.

இந்நிலையில் தனது அடுத்தகட்ட சேவையாக மளிகை பொருட்களை விநியோகிக்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை உணவுப் பொருட்களை மட்டுமே விநியோகித்து வந்த ‘ஸ்விக்கி’ இனி மளிகை பொருட்கள் முதல் மருந்து மற்றும் அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களை விநியோகிக்க இருக்கிறது . இதுகுறித்து அவர்களின் வலைத்தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்கள். ‘ஸ்விக்கி ஸ்டோர்ஸ் ‘ என்ற தளத்தில் பொருட்களை தேர்வு செய்து, வேண்டிய பொருட்களின் பட்டியலை உறுதி செய்தல் போதும், வசதியான கட்டண முறையில் வீட்டுக்கு பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது

ஆதரவற்ற குடும்பத்தினர் இவர்களின் சேவைக்கு மிகப்பெரிய ஆதரவு தர இருக்கின்றனர் .இதன் மூலம் முதல்கட்டமாக 3500 நிறுவனங்கள் இப்போது ‘ஸ்விக்கி ஸ்டோர்ஸ் ‘தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. அப்பல்லோ பார்மசி உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் இச் சேவையில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது