எங்களிடம் கிரிக்கெட் விளையாட, இந்தியாவை கேட்கும் அளவுக்கு நாங்கள் தயாராகுவோம் – பொங்கி எழுந்த பாகிஸ்தான் இயக்குனர்

0

கிரிக்கெட் என்றாலே அதில் சுவாரசியம் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுவதே… இந்தியா பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை மிக விரும்புவர்.

இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் கிரிக்கெட் கிரிக்கெட் விளையாட போகிறது என்றாலே இருநாட்டு மீடியாக்களும் வரிசை கட்டிக் கொண்டு களத்தில் இறங்கும்…

ஆனால் மும்பை குண்டு வெடிப்பு நடந்ததற்கு பிறகு, இந்த குண்டுவெடிப்புபிற்கு காரணம் பாகிஸ்தானே என்று இந்தியா குற்றம் சாட்ட, அதன்பிறகு எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தானுடன் இனி இந்தியா விளையாடாது என்று அறிவித்தது பிசிசிஐ…

ஐசிசி ஏற்பாடு செய்யும் போட்டிகளில் மட்டுமே பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடி வருகிறது . இதனாலேயே இந்த இரண்டு கிரிக்கெட் வாரியங்களும் அவ்வப்போது மோதல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஒப்பந்தம் செய்துகொண்ட படி இந்திய அணி எங்கள் நாட்டிற்கு விளையாட வராததால் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.. எனவே நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் icc யிடம் வழக்கு தொடர்ந்தது . ஆனால் இந்த வழக்கில் இந்தியாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வர பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வருத்தமும் பின்னடைவும் கோபமும் ஏற்பட்டது.

இருந்தாலும் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட வேண்டும் அல்லது பாகிஸ்தான் நாட்டிற்கு இந்தியா வந்து விளையாட வேண்டும் என்பது அங்குள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர்களும் வாரியமும் அவ்வப்போது கோரிக்கை வைத்துக் கொண்டுதான் இருக்கின்றன..

இந்நிலையில் தற்போது புதிய நிர்வாக இயக்குனராக பொறுப்பை ஏற்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் இயக்குனர் வாசிம் கான் அவர்கள் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்

என்னவென்றால் எங்கள் கிரிக்கெட் வீரர்களின் தகுதியை நாங்கள் மென்மேலும் பலப்படுத்துவோம் .. இதனாலேயே இந்தியா தானே வந்து எங்களிடம் விளையாட வருமாறு கூறும் நிலை வெகு சீக்கிரம் உருவாகும் என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் இது மிகப்பெரிய சவாலாகும். இருப்பினும் இந்த விஷயத்தில் தீர்வு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்..

இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாட முடியவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது .அதனுடைய எங்களுடைய வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருக்கிறது என்றும் கூறியுள்ளார் இயக்குனர்.. எங்கள் நோக்கம்  என்னவெனில் பாகிஸ்தான் கிரிக்கெட் உலகத்தரம் வாய்ந்த அளவுக்கு உயர்த்த வேண்டும் .எங்கள் வீரர்களை சர்வதேச அளவிற்கு வாழ்க்கை வேண்டும் என்றும் கூறினார்.

Comments are closed.