உடுமலை கௌசல்யா திடீரென்று சஸ்பெண்ட்

0

உடுமலை கௌசல்யா அவரது பணியில் இருந்து திடீரென்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

கடந்த வருடம்  உடுமலை உடுமலையில் நடந்த கொடூர ஆணவக்கொலை உலகமெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு சம்பவம். இளம் வயதிலேயே தன்னுடைய கணவரை இழந்த கௌசல்யா, அந்த கொலைக்கு காரணமான தன் பெற்றோர்களையும் சேர்த்து தண்டனை வாங்கி கொடுத்தார்

இந்நிலையில் சமீபத்தில் பறை இசை கலைஞர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார்

விஷயம் என்னவென்றால், குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் கிளெர்க் பணியில் வேலை பார்த்து வந்த கௌசல்யாவை, நிர்வாகம் திடீரென்று அதிரடி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் gypsy என்ற திரைப்படத்திற்கு’ பேட் பாய்’ என்ற பாடலில், ஒரு சில  பகுதிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply