உங்க வாழ்வில் இருக்கும் பிரச்சனை, உடனே சரியாக…இதை செய்யுங்க

வாழ்க்கையில் ஏதாவது ஒரு அதிசயம் இல்லை , ஏதாவது ஒரு மாற்றம் நடக்கணும்னு ஆசைப்படுறீங்களா, அப்போ இந்த விரதத்தை கண்டிப்பா நீங்க செஞ்சு செஞ்சு பாருங்க ..

சோமவார விரதம் அப்படிங்கறதுதான் இந்த விரதத்தின் பெயர். சோமன் என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று  அர்த்தம், சந்திரபகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை வடமொழியிலிருந்து சோமவாரம் அப்படின்னு சொல்றாங்க .

பொதுவா திங்கட்கிழமை என்பது சிவனோட தினமாகும் அப்படி 16 திங்கட்கிழமை சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபட்டு  வந்தால் அதுக்கு பேரு சோமவாரவிரதம், அதாவது 16 சோமவார விரதம் அப்படின்னு சொல்றாங்க.

இந்த சோமவார விரதம் செஞ்சோம்னா நமக்கு என்னென்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும் பார்க்கலாம். சோமவார விரதம் தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள்  சிவனுக்காக இருப்பது தான் ரொம்ப சிறப்பு .

ஒவ்வொரு திங்கட்கிழமையும் அதிகாலையில் எந்திரிச்சு வீட்டில் சிறிய அளவில் இருக்கிற சிவலிங்கத்துக்கு பூ சூட்டி உங்கள் நெற்றியில் திருநீறு பூசிக் கொள்ளுங்கள் .சர்க்கரை பொங்கல், பாயாசம் போன்ற உணவுகளை படைத்து சிவனுக்கு வந்து நெய்வேத்தியம் செய்து விட வேண்டும், சிவ மந்திரங்கள் படிக்க வேண்டும் .

இந்த விரதம் இருக்கிறவங்க மூன்று வேளையும் எதுவுமே உண்ணாமல் இருப்பது மிகவும் சிறப்பு என்றாலும், வேலை தொழில் போன்றவற்றில் இருப்பவர்கள் மூன்று வேலையும் சாப்பிடாமல் இருக்க முடியாது. அதனால அவங்க உப்பு சேர்க்காத  உணவை சாப்பிடலாம், இல்லேன்னா பால் பழங்கள் சாப்பிடலாம். அப்புறம் மாலையில் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் இல்லைன்னா அர்ச்சனை செய்து வீட்டுக்கு திரும்பி, சிவனுக்குரிய பிரசாதங்களை மட்டும் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

ஒரு சிலருக்கு தொடர்ச்சியாக 16 திங்கட்கிழமைகளில் விரதம் செய்ய முடியாத நிலை இருக்கும் ,அப்படிப்பட்டவங்க  அடுத்த திங்கட்கிழமை சிவனை வழிபட்டு விரதத்தை தொடர வேண்டும்.

இந்த சோமவார விரதம் மேற்கொள்ளும் திருமண வயது ஆண்கள் மற்றும் பெண்கள் உங்களுக்கு கண்டிப்பா சீக்கிரம் திருமணம் நடக்கும். அப்புறம் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள் .  உங்களோட தாய்க்கு ஏற்பட்ட தோஷங்கள் உடல் பாதிப்புகள், நோய்கள் எதுவானாலும் உடனே சரியாயிடும் . முக்கியமா, குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். சந்தோஷம் கிடைக்கும் .இது இரண்டுமே இருந்தால் பணப்புழக்கம் அதிகமாகும்.

Leave a Reply

Your email address will not be published.