இவனுக திருந்தவே மாட்டாங்களா…? காப்பகத்தில் 15 பெண் குழந்தைகள் பலாத்காரம்

0

காப்பகம் என்ற பெயரில் அங்கு இருக்கும் 15 பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியையம் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் ரமணா நகர் அருகே ‘அருணை சில்ட்ரன்ஸ் கோம் ‘ என்ற தனியார் காப்பகம் நடைபெற்று வந்தது

அங்கு, பலதரப்பட்ட பெண் குழந்தைகள் இருந்த போதிலும், குறிப்பாக 15 பெண் குழந்தைகளுக்கு மட்டும் ,ஆபாச படம் காட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த ரகசிய தகவலையடுத்து அந்த காப்பகத்தின் இரவோடு இரவாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த சோதனையில் பாலியல் சம்பவம் நடைபெற்றது உண்மை தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கிருந்த 15 குழந்தைகளை அரசு குழந்தைகள் காப்பகத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்தது மாவட்ட நிர்வாகம் .காப்பகத்தில் உரிமையாளர் ,பராமரிப்பாளர் வினோத் மற்றும் ஊழியர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் காப்பகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் அனைத்து உபகரணங்களையும் திருவண்ணாமலை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave A Reply