இளையராஜாவின் இசையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி

0

இசைஞானி இளையராஜாவின் இசையில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிக்கிறார்

இசையமைப்பாளராக இருந்த ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியும் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வந்து வெற்றி கண்டுள்ளனர்.  அதில் தற்போது விஜய் ஆண்டனி பல ரசிகர்களை பெற்றுள்ளார். அவர் நடித்த சலீம், நான், பிச்சைக்காரன், எல்லோருக்கும் பிடித்த விதமாகவும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது .அதில் கடைசியாக வெளிவந்த எமன் திரைப்படம்  மட்டும் சரியாக வெற்றி பெறவில்லை.

இதற்கு காரணம் எமன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனியை தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், படத்தொகுப்பாளர், என பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்ததால் நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனதாகவும், கதையிலும் கவனம் செலுத்தாமல் போவதாகவும் அவர் கூறியுள்ளார் .இதனால் இனி வரும் படங்களில் நடிப்பு மட்டுமே செய்யப்போவதாகவும் , தான் நடிக்கும் படங்களுக்கு இனிமேல் இசையமைக்கவும் மாட்டேன் என்றும் முடிவு செய்துள்ளார்.

அதேபோல் அடுத்து வரவிருக்கும் தமிழரசன் என்ற திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார் . படத்தொகுப்பை வேறு ஒருவர் செய்ய உள்ள இப்படத்தில் , இயக்குனர் மோகன்  ராஜாவின் மகனும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave A Reply