இரவு கண் விழிப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் …

0

தற்போது உள்ள இளைஞர்களிடம் இரவு தூக்கம் பழக்கம் குறைந்து, பகலில் தூங்கி விழுவது அதிகமாக உள்ளது… அப்படி என்னதான் செய்கிறார்கள் என்று கேட்டால் ஒன்றுமில்லை ,தங்களுடைய ஸ்மார்ட் போனில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், என அனைத்து வித சமூக வலைத்தளங்களில் மூழ்கி விடுகிறார்கள்

இரவு  3 மணிக்கு படுத்து தூங்குவது என்பது சர்வசாதாரணமாகி விட்டது… அப்படி பழக்கம் உள்ளவர்கள் இதை படித்தவுடன் திருத்திக் கொள்வது உங்கள் உடல்நலத்திற்கு நல்லது

விஷயம் என்னவென்றால் இரவு நேரத்தில் தூக்கம் கெடுப்பவர்கள் இதய நோய் மற்றும் புற்று நோய்க்கு ஆளாக நேரிடும் என்று ஓர் அதிர்ச்சி ஆய்வு தெரிவிக்கிறது.

சில சுரப்பிகள் நம் உடம்பில் இரவு மட்டுமே சுரக்கும் என்றும் தெரிவிக்கவும் அந்த ஆய்வு ,இரவு நேரத்தில் கண் விழிப்பதால் டிஎன்ஏ எனும் கரு அமிலம் சிதைய வாய்ப்பு அதிகமாக உள்ளது என்கிறது.

இதனால் இதயம் சம்பந்தமான நோய்கள் மற்றும் கேன்சர் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக ஒரு ஆங்கில நாளேடு தன்னுடைய ஆய்வறிக்கையில் இந்த தகவலை தெரிவிக்கின்றது.

இரவில் வேலை செய்யும், இரவில் முழித்திருக்கும் பலரின் இரத்தத்தை பரிசோதனை செய்து, இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பின்பு இவர்களுக்கு கேன்சர், நரம்பு சீர்கேடு ,இதய சம்மந்த நோய்கள் அதிகம் வர வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர் .

Leave A Reply