இயக்குநர் பாலாவிற்கு பதிலாக கௌதம் மேனன்…!

0

தெலுங்கில் சக்கை போடு போட்ட ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்காக இயக்குனர் பாலா அவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக வைத்து இப்படம் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு டிரைலரை வெளியிட்டது.

ட்ரைலர் வெளிவந்த தினத்தில் இருந்து பல பிரச்சனைகளை சந்தித்து வந்த இந்த திரைப்படம் , கைவிடப்பட்டதாக தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.

இயக்குனர் பாலா இத்திரைப்படத்தைப் திருப்தியாக எடுக்கவில்லை என்று காரணம் கூறி படத்தை நிறுத்தி விட்டது தயாரிப்பு நிறுவனம்.

துருவின் எதிர்காலம் கருதி இந்த பிரச்னை பற்றி நான் பேச விரும்பவில்லை என்று இயக்குனர் பாலா தெரிவித்து விட்டார்.

ஆனால் வேறு ஒரு இயக்குனரை வைத்து இதே திரைப்படத்தை துருவை கதாநாயகனாக வைத்து இந்த திரைப்படம் தொடரும் என்று நிறுவனம் சொல்லி வந்தது.

இந்நிலையில் பாலா இயக்கி விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடித்த ‘வர்மா’ என்ற திரைப்படம், கைவிடப்பட்ட நிலையில் , மீண்டும் இயக்குனர் கௌதம் மேனன் இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் வர்மா படத்தில் மேகா ஹீரோயினாக நடித்து இருந்தார் .  அவரையும் மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி ஹீரோயினாக நடிக்க  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

Comments are closed.