இப்பவே கண்ண கட்டுதே – ‘இளையராஜா 75’ டிக்கெட் விலை

0

இளையராஜா 75 என்ற நிகழ்ச்சி சென்னையில் இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கிறது

இளையராஜாவின் 75 வயது சாதனையை விளக்கும் விதமாக, அவரை கவுரவிக்கும் விதமாகவும் சென்னையில் 2 நாட்கள் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இதற்கு தடைகளை வாங்க நீதிமன்றத்தில் புகார் அளித்த தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றம் கடிந்துகொண்டு, இளையராஜா மிகப் பெரிய கலைஞர்,  ஹிந்தி பாடல்களை கேட்டு கொண்டிருந்த நம்மை தமிழ்பாடல்களை கேட்க வைத்தவர் இளையராஜா.. உலகமே உற்று நோக்கும் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய எண்ணுவது அவரை மட்டுமல்ல. அவரின் புகழையும். தமிழையும் .அவமானப்படுத்துவது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் ஒரு தனியார் ஊடக பேட்டியின்போது ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இளையராஜாவை மேலும் புகழ்ந்து பேசியது, இளையராஜாவின் புகழுக்கு புகழ் சேர்ப்பது போல் ஆகிவிட்டது.

இந்நாளில் பிரபல முன்பதிவு செய்யும் இணையதளத்தில் இளையராஜா 25 நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் டிக்கெட்டின் விலை 25 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இளையராஜாவின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியை கொண்டுள்ளனர்.

Leave A Reply