இனி சனி ஞாயிறுகளிலும் பள்ளிகள் இயங்கும்-மாணவர்கள் அதிர்ச்சி

0

அனைத்து செய்தி சேனல்களிலும், செய்து பத்திரிகைளிலும், தலைப்புச் செய்திகளாக கடந்த இரண்டு வாரங்களாக இருந்து வந்தது ஜாக்டோ ஜியோ போராட்டங்கள், ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற பல வகையில் போராட்டம் நடத்தி ,தற்போது தற்காலிக வாபஸ் பெற்று அவர்கள் பணியில் தொடர்ந்து உள்ளார்கள்.

முக்கியமாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு ,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த செய்வது மிகப் பிரதானமாக இருந்தது .

அடுத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு ,மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்தல், ஏழாவது சம்பள கமிஷன் அறிவுரைப்படி 21 மாத சம்பள நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் பல பள்ளிகள் இயங்காமல் இருந்து வந்தன.

இதில்  இதில் மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி  மன வருத்தத்தில் இருந்தனர். இன்னும் சில வாரங்களில் தேர்வுகள் தொடங்க இருப்பதால், பல பாடங்களை நடத்த இயலாமல் போனது… மாணவர்களுக்கு மிகுந்த சுமையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் போராட்டத்தால் இயங்காமல் போன அந்த ஒன்பது நாட்களை சரி செய்யும் வகையில், விடுபட்ட பாடங்களை மாணவர்களுக்காக நடத்திய முடிக்கவும் ,அடுத்து வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வகைகள் எடுக்கப்படும், என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .

Leave A Reply