இந்த 9 நாள் விரதம்…உங்களுக்கு கண்டிப்பா சொந்த வீட்டை கொடுக்கும்.

0

சொந்த வீடு கனவு அல்லது ஏக்கம் இல்லாதவர்கள், இந்த உலகத்தில் யாருமே இருக்க மாட்டாங்க. உலகத்தில் எவ்வளவோ பேரு சொந்த வீடு இருந்தும் அந்த வீட்டில் வாழ முடியாமல் வெளிநாட்டிலேயே அல்லது வாடகை வீட்டிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.

இன்னும் சிலர் இந்த வருஷம் கட்டிடலாம் இல்ல அடுத்த வருஷம் கட்டிடலாம்  அப்படின்னு கனவு மட்டுமே கண்டிருப்பார்கள் இன்னும் சில பேர் வீட்டுல இருக்கிற ஜுவல்ஸ் எல்லாம் வச்சு மேலும் கடனை வாங்கி வீடு கட்டி கடனாளியாகி  வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த மாதிரி சொந்த வீடு பிரச்சனைகள் அல்லது சொந்த வீடு அமைய எல்லோருக்கும் ஒரே ஒரு பரிகாரம் தான். அதுவும் இந்த விரதம் மட்டும்தான்.

எல்லோருக்கும் சொந்தமா ஒரு வீடு அமையணும்னு  என்றால் இந்த விரதத்தை வெறும் ஒன்பது வாரங்கள் மட்டுமே செய்யுங்கள் .உங்களோட சொந்த வீடு கனவு கண்டிப்பாக நினைவாகும்.

நவக்கிரகங்களில் முக்கியமான கிரகம் செவ்வாய் .இதைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருப்பீங்க ஒரு மனிதனுக்கு ரத்தம், தைரியம், பூமி சம்பந்தமான சொத்துக்கள் ,எதிர்ப்பு சக்தி, செவ்வாய் தோஷம்,சொந்த வீடு, இது எல்லாத்துக்கும் மூலகாரணமாக விளங்குபவர் செவ்வாய் பகவானாவார்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருக பகவானை வணங்கி செவ்வாய்க்கிழமைகளில் விரதம் மேற்கொண்டு வழிபட வேண்டும்

இந்த மாதிரி செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கிறவங்க காலையில் எந்திரிச்சு அதுவும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து வீட்டில் விளக்கேற்றி விட்டு அருகில் இருக்கிற முருகன் கோவிலுக்கு போய் வழிபட வேண்டும்

பின்பு வீட்டுக்கு வந்தவுடனே பாலு அல்லது ஜூஸ் இது மட்டும் சாப்பிட்டு விரதத்தைத் தொடர வேண்டும். முருகனுக்கு உகந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், அப்புறம் மந்திரங்கள் ஆகியவற்றை கேக்கணும் பாராயணம் செய்யவும்.

மீண்டும் சாயங்காலம் 6 மணிக்கு முருகன் கோவிலுக்கு சென்று மனசார முருகனை வேண்டி வழிபட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம் இந்த மாதிரி ஒன்பது செவ்வாய்க்கிழமை விரதமிருந்து  முருக பகவானே உளமாற மனதார வேண்டுபவர்களுக்கு கண்டிப்பாக அந்த முருகன் அருளால் சொந்த வீடு அமையும்.

Leave A Reply