இணையத்தை கலக்கும் ” #ஆத்தோடு அடிச்சுட்டு போகப்பிடாதா”

0

இன்றைய நிலவரப்படி இந்திய பிரதமர் நரேந்திரமோடியை விமர்சனம் செய்வது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கும்பமேளாவில் புனித நீராடிய  விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகுந்த கேலிக்கு உள்ளாகியுள்ளது

டிவிட்டரில் ” #ஆத்தோடு அடிச்சுட்டு போகப்பிடாதா” என்ற ஹேஸ்டேக் நம்பர் 1 ஆக மாறியுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளா மிகவும் புகழ்பெற்றது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து நீராடுவார்கள் .கங்கை யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய புண்ணிய ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவது மிகப் பெரிய புண்ணியம் என்று கருதுவார்கள்.

இந்த விழா வரும் மார்ச் 4ம் தேதி வரை நடக்கும்… பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை கும்பமேளாவில் புனித நீராடி ஆரத்தி காண்பித்து வழிபட்டார். அதற்கு முன்பாக துப்புரவு தொழிலாளிகளின் கால்களை கழுவி மரியாதை செய்தார் .

இந்த இரண்டு நிகழ்வுகளும் மிகப்பெரிய கேலிக்கு உண்டாகி உள்ளது…. அதில் பாரத பிரதமர் நீராடிய விஷயம் ட்விட்டரில் அனைவரையும் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகி உள்ளது.

தற்போது டுவிட்டரில் நம்பர்-1 ஹேஸ்டேக் ஆக ” #ஆத்தோடு அடிச்சுட்டு போகப்பிடாதா” இணையத்தை கலக்கி வருகிறது.

Comments are closed.