ஆரம்பிச்சிட்டாங்கப்பா… வேலை நிறுத்தத்தை….

0

இன்று முதல் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு ஜாக்டோ ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை கேன்சல் செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கவும், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் நீக்குதல், 7வது சம்பள கமிஷன் அவங்களோட தொகையை உடனடியாக வழங்க வேண்டும் இவ்வாறு பல கோரிக்கைகளை முன்வைத்து, அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ பல்வேறு வகையான போராட்டங்களை நடத்துகிறார்கள். இது சம்பந்தமா அரசு ஊழியர்களுக்கும் அரசுக்கும், பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து தோல்வியில்தான் முடிந்தது.

நீதிமன்ற சமாதானமும் தோல்வியில் தான் முடிந்தது .இதனையடுத்து இன்று முதல் அதாவது ஜனவரி 22- 2019. முதல் காலவரையற்ற தொடர் போராட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள் .எல்லா ஆசிரியர் சங்கங்களும் இந்த அமைப்போடு இணைந்து போராட்டத்தில் பங்கேற்க உள்ளது. இதற்கு பதிலடியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வேலைக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்ய தமிழக அரசு அறிவித்திருக்கிறார்கள் . இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம் என்று இந்த அமைப்பின் தலைவர்கள் கூறி இருக்கிறார்கள்.

இன்றிலிருந்து வேலைக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் பட்டியலை தயார் செய்ய உத்தரவிட்டு உள்ளது அரசு.

Leave A Reply