அர்ச்சனை தேங்காய் உடைந்து இருந்தால் …?

0

நாம் தினசரி வீட்டிலேயே தீபமேற்றி மலர் மாலைகள் அணிவித்து, சாமிகளுக்கு தீபாராதனை காட்டி வணங்குகிறோம். அதுமட்டுமல்லாது வாரம் இருமுறை வீட்டின் அருகிலேயே இருக்கும் கோவிலுக்கு சென்று வணங்குகிறோம் .இது ஒருவித நிம்மதியையும் ,அமைதியையும், மனதுக்கு கொடுத்தாலும் எல்லோருக்கும் கடவுளிடம் தமக்குத் தேவையான வேண்டுதலை நிறைவேற்றவே கோவிலுக்கு சென்று வருகிறோம்.

அவ்வாறு கோவிலுக்கு செல்லும்போது, சில நேரங்களில் எலுமிச்சைப் பழம் எடுத்து செல்வோம். சில நேரங்களில் வெறும் மலர் மாலைகளை எடுத்து செல்வோம், சில நேரங்களில் அர்ச்சனை செய்வோம்., அவ்வாறு அர்ச்சனை செய்யும்போது, உடைக்கும் தேங்காயில் பூ இருந்தாலும் அல்லது அழுகிப்போய் இருந்தாலோ அல்லது சரியாக உடையவில்லை என்றாலும் மனதிற்கு மிக அழுத்தமாகவும் ஒருவித பயமும், மிகப்பெரிய நெருடலை ஏற்படுத்துகிறது.

ஆனால் சாஸ்திரங்கள் அதை வேறு விதமாக சொல்கிறது.. அவ்வாறு நாம் தேங்காய் உடைக்கும் பொழுது,  சரியாக முடியவில்லை என்றாலும் அல்லது அழுகிப்போய் இருந்தாலும் மனம் உடைய தேவையில்லை என்று சாஸ்திரம் சொல்கிறது.

என்னவென்றால் ,நாம் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் அது நல்ல அறிகுறி என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.  இதோடு நமக்கு இருக்கும் தீய சக்தி, பீடை , திருஷ்டி, போன்றவை அகன்று ஓடி விடும் …எனவே இது நல்ல அறிகுறியே என்று சாஸ்திரம் சொல்கிறது.

மேலும் ,இது வீட்டில் சுப காரியங்கள் நடக்க நிறைய வாய்ப்பு இருப்பதாகவும், அர்த்தம் கொள்ள வேண்டும் என்றும், தேங்காய் பூ இருந்தால் நாம் எதிர்பாராத விதமாக நமக்கு பணவரவு மிக அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது .

Leave A Reply