அரசு ஊழியர்களின் சம்பள விவரங்களை போட்டுடைத்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

0

போராட்டம் செய்து வரும் அரசு ஊழியர்களின் சம்பள விவரங்களை போட்டுடைத்தார் அமைச்சர் ஜெயக்குமார்.

அதாவது, அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து, கடந்த சில தினங்களாக பல கோரிக்கைகளை முன்வைத்து, போராட்டம் நடத்துகின்றனர். இதனால் பொதுமக்களும், மாணவ மாணவிகளும் .மிகவும் பாதிப்படைந்து உள்ளார்கள். சம்பந்தப்பட்ட பெற்றோர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் .

அரசு போராட்டத்தை நிறுத்தி பணிக்கு திரும்புமாறு, அறிவுரை செய்தும்,மிரட்டியும் பார்த்தது, அதற்கு பணியாத அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டத்தை தொடர்கின்றனர்.

மேலும் ,இதற்கு தற்கால ஆசிரியர்களாக தகுதி உள்ளவர்களுக்கு ,ரூ 7,500 சம்பளத்துடனும் பின்பு அதையே பத்தாயிரம் சம்பளம் என அறிவிக்கப்பட்டதால் பல வேலையில்லா பட்டதாரிகள் இந்த ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

இந்நிலையில் ,இன்று அரசு ஊழியர்கள் வலியுறுத்தும் சம்பள விகிதத்தை எங்களால் தர முடியாது என்றும் ,அவர்கள் பிற தனியார் நிறுவன ஊழியர்களை காட்டிலும், அதிகமாக சம்பளம் பெறுகின்றனர் என்று சொல்லி, அதை பட்டியல் போட்டு விவரித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

அமைச்சுப் பணியாளர், தலைமை சக பணியாளர், ஆசிரியர்கள், பகுதி நேர பணியாளர்கள் என தனித்தனியே சம்பள அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .அமைச்சுப் பணியாளர்களை பொருத்தவரை குறைந்தபட்சமாக உதவியாளர் பணிக்கு மாதம் 18 ஆயிரத்து 840 ரூபாயும் சராசரியாக 28 ஆயிரத்து 560 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.

 தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உதவியாளருக்கு, மாதம் 24 ஆயிரம் ரூபாயும் , சராசரியாக 36 ஆயிரத்து 360 ரூபாய் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  அதேபோல் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்ததும் மாதம் 24 ஆயிரத்து 720 ரூபாயும் வழங்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி நேர பணியாளர், சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர்கள் ,பணியில் சேர்ந்ததும் 10 ஆயிரத்து 53 ரூபாயும், சராசரியாக 14 ஆயிரத்து 495 ரூபாயும் ஊதியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக பட்ச ஊதியமாக அமைச்சுப் பணியாளர்கள் உள்ள கண்காணிப்பாளருக்கு பணியில் சேர்ந்ததும் மாதம் 44 ஆயிரத்து 280 ரூபாயும் சராசரியாக 66 ஆயிரத்து 840 ரூபாய் வழங்கப்படுகிறது.

தலைமைச் செயலக இணை செயலாளருக்கு, பணியில் சேர்ந்ததும் ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களை பொறுத்தவரை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணியில் சேர்ந்ததும் 68 ஆயிரத்து 280 ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேபோல் அரசு கடுமையான நெருக்கடியை சந்தித்த போதும் கேட்காமலேயே அரசு ஆசிரியர்கள் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தந்ததாகவும் அத்துடன் 2018 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவரங்களை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்

அதன்படி அரசின் மொத்த வரி வருவாய் மற்றும் மத்திய அரசின் திட்ட நிதியாக ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 950 கோடி ரூபாய் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave A Reply