அப்துல் கலாம் இறந்த அன்றுதான், நான் சமுக சேவகியாக உருவெடுத்தேன் – ரஞ்சிதா குன்னியா

0

47179081_1998963893737094_6419796640781041664_o

சமூக சேவையை மிக எளிதாக பார்க்கும் இந்த சமூகத்தில் பல தடைகளையும் தாண்டி, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் கனவு திட்டமான

”அனைவருக்கும் கல்வி 2020, பசுமை இந்தியா” போன்ற திட்டங்களில் தன்னை இணைத்து கொண்டு மிக நேர்த்தியாக செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் கவனத்தையும் ஈர்க்கிறார் ‘இன்பமயா அறக்கட்டளையின்’ தலைவர் ரஞ்சிதா குன்னியா.

47681738_2003172146649602_8980369732209213440_n.jpg

மதுரையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வாழ்ந்த இவருக்கு, இவரின் பெற்றோரின் வளர்ப்புப்படி ‘அனைவருக்கும் முடிந்தவரை எப்பொழுதும் உதவ வேண்டும்’ என்பதை தாரக மந்திரமாக வைத்துள்ளார். மதுரை சௌராஷ்டிரா பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து, காமராஜர் பல்கலையில் எம்.சி.எ படித்துள்ள இவர்,
ரோட்டோரங்களில் உணவு, உடையின்றி திரியும் பலருக்கு தரமான உணவு மற்றும் உடைகளையும் வழங்குவதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்கிறார்.

 

45221531_1983706488596168_7193439861334867968_o

சிறு வயதிலிருந்தே உதவும் எண்ணம் கொண்ட இவர், சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி ,பணம் சம்பாதித்தும் திருப்தி இல்லாமல்,
சமூக மாற்றங்களுக்காக போராடுவதையும், சமூக சேவையும் மட்டுமே திருப்பி தரும் என்று முழு நேர சமூக சேவகியாகியுள்ளார் இந்த மதுரை மாநகர ரஞ்சிதா குன்னியா.

47505978_2002732653360218_1707979743384567808_o

அப்துல் கலாம் இறந்த அன்றுதான், அவரை பற்றி முழுமையாக தேடி அறிந்தேன் என்னும் இவர், இதுவரை நாம் வாழ்ந்த வாழ்க்கையில் பணம் மட்டுமே இருந்தது, இனிமேலாவது யாருக்காவது பிரயோஜனமாக வாழ வேண்டும் என்ற எண்ணமும் பிறந்தது என்கிறார்

46387085_1990640121236138_8041878262311288832_o

2020 வருடத்திற்குள் சுமார் ஒரு லட்சம் ஏழை எளிய மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு அரசு பள்ளியிலும் 20 தனித்திறன் கொண்ட மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கி ஒரு மரக்கன்றையும் நடுவித்து சாதனை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் உழைக்கும் இவர், 2017ம் ஆண்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 100 பேருக்கு, சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கியுள்ளார்.

47388814_2002713640028786_3013367926959898624_o

சமூக வலைத்தளங்களில் தேவை இல்லாத விஷயங்களை ஷேர் செய்வதும் அரட்டை அடிப்பதும் பொழுதுபோக்காக பலர் இருக்கும் மத்தியில், இதே சமூக வலைத்தளங்களை வைத்து நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து, அதன்மூலம் அநாதை குழந்தைகள், ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மனநோயாளிகள் என அனைவர்க்கும் தேடி உதவி செய்கிறார்.

47469073_2003171513316332_2796040618982244352_n.jpg

அடுத்தவர்களுக்கு உதவி செய்வதும், அவர்களை சந்தோசப்படுத்தி பார்ப்பதும்தான், மனநிறைவான வாழ்க்கை என்று நம்மை நெகிழ வைக்கிறார் சமூக சேவகி ரஞ்சிதா குன்னியா. இந்த சேவையை முழு நிறைவுடன் செய்ய, இவருக்கு இவரின் குடும்பத்தாரின் ஆதரவு தெம்பூட்டுகிறது.

WhatsApp Imagedd 2018-12-24 at 6.53.26 PM

மேலும் இவர் திரை பிரபலங்களான பாரதிராஜா, ராஜ்கிரண், அமீர், பார்த்திபன், வெற்றிமாறன், சமுத்திரக்கனி மற்றும் பேஸ்புக் நண்பர்களின் உதவியோடு ‘கஜா’ புயலுக்கு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று உதவியுள்ளார்…

WhatsApp Image 2018-12-24 at 6.53.26 PM

6 வது முறையாக ‘கஜா’புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று உதவ போகும் இவர், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை அவர்களோடயே கொண்டாட முடிவெடுத்துள்ளார்.

இந்த சேவைகளுக்காக பல பாராட்டையும் ஆசிர்வாதத்தையும் பெற்றாலும் திருநெல்வேலி லயன்ஸ் கிளப் வழங்கிய “Best social service organization” விருது என்னை பெருமைபடுத்தியது என்கிறார் இவர்

47680554_2005225266444290_3225603813201149952_o

இவரின் அறக்கட்டளைக்கு பண உதவி மற்றும் பொருள் உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள 9994522272

Leave A Reply