அதிர விட்ட எல்ஐசி. ஆடிப்போன சிஆர்பிஎப் வீரரின் குடும்பம்

0

ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் நமது சிஆர்பிஎஃப் வீரர்கள் பலர் மோசமாக பலியாகினர்

இதில் தமிழக வீரர்கள் இருவரும் கர்நாடகாவை சேர்ந்த குரு என்பவர் வீரமரணம் அடைந்தனர். இந்த வீரர் தனது குடும்பத்தினருக்காக எல்ஐசி முதலீடு செய்து வந்துள்ளார். நேற்று நடந்த தாக்குதலில் இந்த வீரர் இறந்தது தெரியவந்ததுடன் உடனடியாக அவருடைய சேமிப்பு பணத்தை எல்ஐசி, குடும்பத்திற்கு சேர்த்துள்ளது

இந்த வீரமரணத்தை அறிந்த நிமிடமே, குரு என்ற வீரரின் நாமினியின் அக்கவுண்டிற்கு உரிய பணத்தை உடனே எல் ஐ சி அனுப்பி விட்டது . யாரும் விண்ணப்பிக்காமலேயே எந்த ஆவணத்தையும் கேட்காமலேயே எல் ஐ சி அதிகாரிகள் அவர்கள் பணத்தை வழங்கியுள்ளது அனைவருக்கும் மிக ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் பெருமையையும் தந்துள்ளது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அவரின் இறப்பு சான்றிதழ் கூட கேட்காமல் அவருடைய குடும்பத்திற்கு ரூ 3 லட்சத்து 82 ஆயிரத்து 199 பணத்தை வழங்கியுள்ளது.

இதற்காக எல் ஐ சி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு வேலைகளும் எவ்வாறு நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் இந்த விஷயத்தில் அவர்கள் காட்டிய வேகம் அந்த குடும்பத்தினரை மட்டுமல்லாது அனைவரின் பாராட்டையும் பெற்றது.

Comments are closed.