அதிநவீன தொழில்நுட்பதில் தயாரான ‘அலாவுதீனின் அற்புத கேமரா’

0

மூடர்கூடம் திரைப்படத்தின் நடிகர் மற்றும் இயக்குனர் இயக்கத்தில் உருவான  ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளார்கள்

இதில் என்ன ஆச்சரியம் என்றால், உலகத்திலேயே முதல் முறையாக 4K HDR என்ற தொழில்நுட்பத்தில் வெளியான முதல் டிரைலர் இது. இந்த ட்ரைலரை பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் தன்னுடைய டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே இயக்குநர் நவீன் அவர்கள், தன்னுடைய மூடர்கூடம் படத்தில் நிறைய கருத்துக்களை மக்களுக்கு பிடித்தவாறு சொல்லியிருப்பார். அந்த திரைப்படம் ‘மிகச்சிறந்த திரைப்படம்’ என்று அனைத்து  விருது விழாக்களில் பங்கேற்று விருதுகளை தட்டிச் சென்றது…

தற்போது இந்த ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற திரைப்படம் அனைவரின் பாராட்டைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘அக்னி சிறகுகள்’ என்ற திரைப்படத்தையும் நவீன இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply