அதிசயிக்க வைக்கும் பனம்கற்கண்டின் மருத்துவ பலன்கள்

தற்போது அனைவரும் இயற்கை உணவுகள், ஆர்கானிக் உணவுகள் ,என மாறி வரும் சூழ்நிலையில், இனிப்புக்காக நாம் பயன்படுத்தி வரும் வெள்ளை சர்க்கரையை மாற்றி கருப்பட்டி அல்லது பணங்கற்கண்டு இவைகளை வைத்து அடுத்து வரும் தலைமுறையை பாதுகாப்போம் என்று பலரும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்

நிறைய குடும்பங்களில் வெள்ளை சர்க்கரை அதிகமாக உபயோகிப்பது ஒரு மேல்தட்டு மக்களின் நாகரீகம் என்று கருதுகிறார்கள்…. ஆனால் மாறிவரும் சூழ்நிலையில் பனங்கற்கண்டை உபயோகித்து அதன் மருத்துவ குணங்களை நம் உடல்நல பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது பலரும் அறிய வேண்டும்

பனைமரத்தின் வெள்ளை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள் அதாவது சுத்தப்படுத்தாத கருமை நிறம் கொண்ட வெல்லத்தை ‘கருப்பட்டி ‘ என்பதும் சுத்தப்படுத்தி சின்ன சின்ன படிகங்களாக இருக்கும் வெல்லத்தை ‘பனங்கற்கண்டு’ என்றும் சொல்வார்கள்.

இந்த பனங்கற்கண்டை தினமும் பாலில் காய்ச்சி குடித்தால், குழந்தைகளின் சளி பிரச்சினைகள் உடனே சரியாகும் என்பது மிகப்பெரிய தமிழ் மருத்துவ.ம்

மேலும் இவ்வாறு சாப்பிட்டு வர தொண்டையில் உள்ள புண் வலி மிக விரைவாக குணமடையும் என்பது ஒரு அதிசயம்.

குழந்தைகளுக்கு நாட்பட்ட சளி இருமல் இருந்தால், தினமும் இரவு படுப்பதற்கு முன் பாலில் இந்த பனங்கற்கண்டு மற்றும் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, பின் வடிகட்டி அதை குழந்தைகளுக்கு கொடுத்து வர மிகச் சிறந்த மாற்றத்தை காண்பீர்கள்.

அதேமாதிரி பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர்… இதிலிருக்கும் குளுக்கோஸ் குழந்தைகளின் உடல்நலத்தை கூட மிக சரியாக வளர வைக்கும் ஒரு அற்புதத்தை கொண்டது. இந்த பதநீர், மனதிற்கும் உடலுக்கும் மிகுந்த புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

டைபாய்டு, ஜலதோஷம் , காசநோய் இந்த மாதிரியான நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதை தினமும் அருந்துவதால் இதயம் சம்பந்தமான நோய்கள் முற்றிலும் குணமாகும். இதில் இருக்கும் கால்சியம் நம்முடைய பற்களின் ஈறுகளை உறுதிப்படுத்துவதோடு ரத்தக் கசிவு ஏற்படுவதாக இருந்தால் அதை உடனடியாக தடுத்து சரி செய்யும் என்பது இதனுடைய மருத்துவ குணம். மேலும் இதில் இருக்கும் இரும்புச் சத்து , பித்தம் மற்றும் தோல் வியாதிகளுக்கும்  மிகச் சிறந்த மருந்தாகும்

Leave a Reply

Your email address will not be published.