அஜித்துக்கு அட்வைஸ் செய்வது போல் விஜய்யையும் சிம்புவை கலாய்த்த சீமான்

0

சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜீத் வெளியிட்ட அறிக்கை தான் மிக பரபரப்பாக பேசப்பட்டது.

காரணம் தமிழிசை சவுந்தர பாண்டியன் அவர்கள், அஜித் அவர்களின் ரசிகர்களை ,பாஜகவுக்கு ஓட்டு அளிக்கும்படியும், பாரதிய ஜனதாவின் சாதனைகளையும், மோடி அவர்களின் செயல்பாட்டையும், மக்களிடையும் பரப்பும்படி ஒரு மேடையில் வேண்டுகோள் விடுத்தார்…

மறுகணமே, நடிகர் அஜித் அவர்கள், நான் எந்த அரசியல் சார்பு இல்லாதவன், என் திரைப்படமும் என் தனிப்பட்ட வாழ்க்கையும் அரசியல் சம்பந்தப்பட்டபடி இருக்காது என்றும், என்னுடைய அரசியல் என்பது வரிசையில் நின்று ஓட்டு போடுவது மட்டுமே, என் ரசிகர்கள் என்னுடைய படத்தையோ என்னுடைய பெயரையோ தங்களது அரசியலுக்கு பயன்படுத்த கூடாது, என்று தெளிவாக ஒரு அறிக்கை விட்டார்.

இதற்கு பெரும்பாலான இடங்களில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது,

இந்நிலையில் நடிகர் இயக்குனர் மற்றும் அரசியல்வாதி சீமான் அவர்கள், அஜித்திற்கு பாராட்டு தெரிவித்ததோடு, சில நடிகர்கள் போல் இல்லாமல் [அதாவது விஜய் சிம்பு[ தன்னுடைய ரசிகர்களுக்கும், இன்னொரு கட்டளை இட வேண்டும் என்று  அறிவுரை கூறியுள்ளார்.

என்னவென்றால் தன்னுடைய கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதை நிறுத்த, ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விட வேண்டும் என்றும், சீமான் அவர்கள் அஜித்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave A Reply