அஜித்குமாருடன் இணையும் ரங்கராஜ் பாண்டே

0

2019 பொங்கல் நாளில் ரிலீசான இரண்டு படங்களில் மாபெரும் வெற்றியைப் பெற்றது அஜித்குமார் நடித்த விசுவாசம். இந்த வெற்றியை தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படங்களை இயக்கிய இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில், அஜித் நடிக்கும் ஒரு மிகப் பெரிய பிரம்மாண்டமான திரைப்படம் தயாராக உள்ளது.

இத்திரைப்படம் ஏற்கனவே அமிதாபச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக் ஆகும்

‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் , மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நட்பு தொடர, எங்கள் தயாரிப்பில் படம் நடிக்க ஆசைப்பட்டார் அஜித்குமார் என்கிறார், தயாரிப்பாளர் போனி குமார் போனி கபூர்.

அஜித்குமார் உடனே தொழில்முறையான இந்த உறவு இந்த ஒரு படத்தில் மட்டும் நில்லாமல், மென்மேலும் வளரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் திரு போனிகபூர் , இந்தப் படம் ஜூலை 2009 இல் துவங்கி ஏப்ரல் 2020இல் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம் என்று தகவலை தெரிவித்துள்ளார்

மேலும் இதில் பங்கேற்கும் சக நடிகர்கள் மற்றும் தொழில் கலைஞர்களை அறிவித்த திரு போனிகபூர், இதில் முக்கிய வேடமேற்று நடிப்பவர் திரு ரங்கராஜ் பாண்டே என்றார்.

மேலும் கதாநாயகியாக  வித்யாபாலனும், முக்கியமான கதாபாத்திரத்தில் shraddha srinath என்பவரும் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்திற்கு  இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணிபுரிகிறார் .என்னை மிகவும் அவருடைய பின்னணியில் ஈர்த்தவர் திரு யுவன்சங்கர்ராஜா என்று பெருமிதம் கொள்கிறார் போனிகபூர்.

மேலும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்

கேமராமேன் நீரவ் ஷா இதில் பணிபுரிகிறார். இவர் சமீபமாக ரஜினி நடித்த2.0 என்ற திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்.

சண்டை பயிற்சி திலீப் சுப்பராயன், படத்தொகுப்பு  கோகுல் சந்திரன்.

இந்த படத்திற்கான தலைப்பு இன்னும் முடிவாகவில்லை என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply